[தமிழ்] ஸ்கிராட்ச் பூனையின் நகைச்சுவை சங்கம் ----- ஸ்கிராட்ச் தலைமையகத்தின் நிலத்தடியில், ஸ்கிராட்ச் பூனை அவர்களின் அடுத்த பெரிய சாகசத்தை கற்பனை செய்து உருவாக்குவதில் கடினமாக உழைக்கிறது. இன்று, சரியாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அந்த வேலையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஸ்கிராட்ச் பூனை தயாராக உள்ளது. முதல் முறையாக அறிமுகம்:“ஸ்கிராட்ச் பூனையின் நகைச்சுவை சங்கம் சிகிரெட்ச் நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பிற வேடிக்கையான விஷயங்கள்" (வேறொரு நல்ல பெயரை உருவாக்கிறோம்). உங்களுக்கு ஒரு நல்ல ஜோக்/கேலி ஒன்று தெரியுமா? நீங்கள் எப்போதாவது ஒரு சிலேடையில் சிரித்துக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் சிரிக்க விரும்புகிறீர்களா?அப்படியானால் இது உங்களுக்கான இடமாக இருக்கலாம்! கிராண்ட் ஓபனிங்கில் ஸ்கிராட்ச் கேட் உடன் இணைந்து, ஸ்கிராட்ச்சின் புதிய நகைச்சுவை சங்கத்தில் நிகழ்ச்சி நடத்தும் முதல் நபர்களில் ஒருவராக இருங்கள். தொடங்குவதற்கான யோசனைகளைத் தேடுகிறீர்களா? - உங்களுக்குப் பிடித்த நகைச்சுவைகள் அல்லது சிலேடைகள் பற்றிய திட்டத்தை உருவாக்கவும். - நகைச்சுவை சங்கத்தின பிரமாண்ட திறப்பு விழாவிற்கான நேரத்தில் சிரிப்பை சேகரிக்கும் விளையாட்டை வடிவமைக்கவும். - காமெடி சார்ந்த அனிமேஷன் ஒன்றை வடிவமைக்கவும். -ஸ்கிராட்ச் கேட்'ஸ் காமெடி சங்கத்திற்கான ஊடாடும் சுவரொட்டிகளை உருவாக்கவும். - ஜோக் ஜெனரேட்டரை வடிவமைக்கவும். - நகைச்சுவை நடிகருக்கு போலி விளம்பரத்தை உருவாக்குங்கள். -மற்றவர்கள் தங்கள் சொந்த திட்டங்களில் பயன்படுத்தக்கூடிய நகைச்சுவை சங்கத்திற்கான ஒரு மேடையை வடிவமைக்கவும். - நகைச்சுவை வழக்கத்தின் போது கோபோ(Gobo) அல்லது மற்ற சிகிரெட்ச் பாத்திரங்கள் என்ன செய்யக்கூடும் என்று கற்பனை செய்து அதைப் பற்றி ஒரு திட்டத்தை உருவாக்கவும். - ஸ்கிராட்ச் கேட்டின் காமெடி உடையைத் தேர்வுசெய்ய உதவும் உடை அணியும் கேமை வடிவமைக்கவும். - நகைச்சுவை சங்கம் பெயருக்கு வேறு பரிந்துரை உள்ளதா? Scratch Cat உடன் பகிர்ந்து கொள்ள உங்கள் ஆலோசனையுடன் ஒரு திட்டத்தை வடிவமைக்கவும்! நினைவில் கொள்ளுங்கள், இவை பரிந்துரைகள் மட்டுமே! உங்கள் சொந்த முட்டாள்தனமான யோசனைகளுடன் வரவும் அல்லது ஏற்கனவே ஸ்டுடியோவில் உள்ள திட்டங்களில் இருந்து உத்வேகம் பெறவும் உங்களை வரவேற்கிறோம்! நீங்கள் என்ன உருவாக்குவீர்கள்? =^..^= - - - - கடந்த காலங்களில் இணையதளத்தில் வேடிக்கையான மற்றும் ஏப்ரல் பிஹூல்ஸ் தினத்தில் பிடித்தவைகளைச் சேர்த்துள்ளோம், ஆனால் அவை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே.நீங்கள் அவற்றுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம்! அனைவருக்கும் ஏப்ரல் பிஹூல்ஸ் தின வாழ்த்துக்கள்! :D