தமிழ் மொழிபெயர்ப்பு --------- ஒரு வினோதமான கற்பனைக் கதை போன்ற கனவுகளிலிருந்து, வேடிக்கையான மற்றும் அர்த்தமில்லாதவை, உங்களுக்கு சரியானவை வரை, கனவுகள் உத்வேகத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கும்.இந்த scratch டிசைன் ஸ்டூடியோவில், அந்தக் கனவுகளை நிஜமாக்குகிறோம்!உங்கள் சொந்தக் கனவுகளுக்கு விளக்கம் அளிக்க விரும்பினாலும் அல்லது நீங்கள் எழுந்தவுடன் அவற்றை மறந்துவிட்டாலும், கனவுகளைப் பற்றிய ஒரு திட்டத்தை உருவாக்கி எங்களுடன் இணைவீர்கள் என நம்புகிறோம்! -------- தொடங்குவதற்கு யோசனைகளை தேடுகிறீர்களா? -------- - கனவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் காட்டும் பயனுள்ள திட்டத்தை உருவாக்குங்கள். - கனவு காணும் செயல்முறையை பற்றி ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். - விளையாடுபவரின் கனவை நீங்கள் கட்டுப்படுத்தும் படி, ஒரு விளையாட்டை வடிவமையுங்கள். - நீங்கள் ஒரு இடம், நபர் அல்லது விலங்கு பற்றி கனவு காணும் சிறுகதையை அனிமேட்/Animate செய்யுங்கள். - நிஜ வாழ்க்கையில் நீங்கள் பார்க்க முடியாத கற்பனை உலகைக் கொண்டு ஒரு விளையாட்டை உருவாக்குங்கள். - உங்கள் சொந்த கனவு ஒன்றிலிருந்து ஒரு காட்சியை வரைந்து, அதை ஒரு திட்டத்தில் காட்டுங்கள். ------ நினைவில் கொள்ளுங்கள், இவை பரிந்துரைகள் மட்டுமே! உங்கள் சொந்த யோசனைகளையும் கொண்டு வர உங்களை வரவேற்கிறோம் அல்லது ஏற்கனவே ஸ்டுடியோவில் உள்ள திட்டங்களிலிருந்து உத்வேகம் பெறுங்கள்! ------ இந்த ஸ்டூடியோவில் உங்கள் திட்டத்தை பதிவிட உங்கள் திட்டத்தின் லிங்கை கமெண்டில் பதிவிடவும்.திட்டப் பக்கத்தில் உள்ள ‘கோப்பி லிங்க்’ பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் திட்டத்திற்கான லிங்கை கண்டறியலாம். உங்கள் திட்டத்தின் குறிப்புகள் மற்றும் கடன்கள் (notes and credits) பகுதிக்கு கீழே பொத்தான் அமைந்துள்ளது. ------ இந்த டிசைன் ஸ்டுடியோ தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே பகிரப்பட்ட திட்டங்களை சேர்க்க வேண்டாம். (இந்த ஸ்டுடியோ மார்ச் 7, 2023 அன்று தொடங்கியது, எனவே பிப்ரவரி 7, 2023க்குப் பிறகு செய்யப்பட்ட திட்டங்களைச் சேர்க்கலாம்). அந்தத் திகதிக்குப் பிறகு தீம் பொருந்தக்கூடிய திட்டங்கள் எதுவும் உங்களிடம் இல்லையெனில், தயங்காமல் புதிய திட்டத்தை உருவாக்கி அதைச் சமர்ப்பிக்கவும்! ------ அனைத்து திட்டங்களும் சமூக வழிகாட்டுதல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் மற்றும் எல்லா வயதினருக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும். ----- உங்கள் திட்டம் சேர்க்க சிறிது நேரம் ஆகலாம். தயவு செய்து பொறுமையாக இருங்கள், நாங்கள் பழமையான மற்றும் புதிய திட்டங்களைச் சேர்க்கிறோம், எனவே அவை அனைத்தையும் நாங்கள் பார்க்கிறோம். இரண்டு தடவை சேர்க்க தேவையில்லை! ------- SDS (ஸ்கிராட்ச் டிசைன் ஸ்டுடியோ) என்பது ஒரு கருப்பொருள் ஸ்டுடியோ ஆகும், இதில் மேலே காட்டப்பட்டுள்ள தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை, தற்போதைய தீமுடன் பொருந்தக்கூடிய திட்டங்களை ஸ்கிராச்சர்கள் சமர்ப்பிக்க முடியும். ------ புதிய SDS க்யூரேட்டர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க இந்தத் திட்டத்தைப் பார்க்கவும்: https://scratch.mit.edu/projects/413689067/ தயவு செய்து வெறுமனே க்யூரேட்டராக இருக்க கேட்காதீர்கள்! ---- எதிர்கால டிசைன் ஸ்டுடியோவை உருவாக்க உங்களுக்கு யோசனை உள்ளதா? கீழே இணைக்கப்பட்டுள்ள ஸ்டுடியோவிற்குச் சென்று, ஸ்டுடியோ விளக்கத்தைப் படித்து, பின்னர் உங்கள் யோசனையை திட்ட வடிவில் இங்கே சமர்ப்பிக்கவும்: https://scratch.mit.edu/studios/93627/ ----- Scratch Design Studio பற்றி கேள்விகள் உள்ளதா? சிகிரெட்ச் விக்கியின் கட்டுரையைப் பாருங்கள்: https://en.scratch-wiki.info/wiki/SDS ---- SDS, புதிய SDS க்யூரேட்டர்கள் மற்றும் மேலும் பலவற்றை இந்த ஸ்டுடியோவில் பார்க்கவும்! ---- -முன் பக்க படம் @huagoose ஆல் ஆனது. -விளக்கம் @SeeingColors மற்றும் @fromage- ஆல் ஆனது. ------ கனவு எனும் SD ஸ்டுடியோயோவை காண இந்த லிங்கை பார்க்கவும்: https://scratch.mit.edu/studios/32985694